தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை வரவேற்றுள்ள உள்ள விஷால், சென்னையில் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், தயாரிப்பாளர்கள் சங்க பிரச்னையில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. நீதிமன்றத்திற்கு நன்றி. தி.நகர் அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் நாளை(டிச.,21) அகற்றப்படும்.

சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டும், யார் வேண்டுமானாலும் சங்க கணக்கு வழக்குகளை கேட்கலாம். பதவிக்காலம் முடியும் வரை எங்களின் உயிரை கொடுத்து வேலை செய்வோம். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நல்லதே செய்வோம்.

எதிர்ப்பவர்கள் எதிர்த்து கொண்டே தான் இருப்பார்கள். பதவியேற்றதிலிருந்து இதுபோன்ற எதிர்ப்பை பார்த்து வருகிறோம். தடைகளை தகர்த்து எறிந்து இளையராஜாவின் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவோம். இளையராஜா நிகழ்ச்சியை முடித்ததும் பொதுக்குழுவை கூட்டுவோம்.

தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அரசியல் என்பது தனிப்பட்ட நபர்களுக்காக ஒதுக்கப்பட்டது அல்ல. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இளைஞர்கள் அரசியல் ஈடுபட வேண்டும் என்பதே என் நோக்கம்.

இவ்வாறு விஷால் கூறினார்.

Sharing is caring!