தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல்

தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்கள் வெளியீட்டு தேதி ஒதுக்க கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு அதனை பரிசீலித்து சங்கம் தேதி ஒதுக்கும். அந்த தேதியில் தான் படத்தை வெளியிட வேண்டும். இது தான் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய விதிமுறை. இந்த மாதம் முதல் தயாரிப்பாளர் சங்கம் வெளியீட்டில் சில மாறுதல்களை கொண்டு வந்துள்ளது.

அதன்படி மாதத்தின் முதல் வாரமும், மூன்றாது வாரமும பெரிய படங்களுக்கும், இரண்டாவது வாரமும், கடைசி வாரமும் சிறிய படங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். அந்த வகையில் இந்த மாதம் (அக்டோபர்) 18 படங்களை தேதி நிர்ணயித்து தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன் விபரம் வருமாறு

அக்., 4 : 96

அக்., 5 : ராட்சசன், ஆண் தேவதை, நோட்டா

அக்., 12 : கூத்தன், மரகதகாடு, முகம், நட்புன்னா என்னனு தெரியுமா, காட்டுப்புறா

அக்., 18 : வடசென்னை, சண்டக்கோழி 2, திருப்பதி சாமி குடும்பம், எழுமின், அண்டாவ காணோம்

அக்., 26 : உத்தரவு மஹாராஜா, வாண்டு, மாணிக், ஜருகண்டி

தயாரிப்பாளர் கில்டு உறுப்பினர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. அவர்களின் படங்களும் இதனுடன் வெளிவரும்.

Sharing is caring!