தயாரிப்பு நிறுவன தகவலை ரெக்கார்ட் செய்து வெளியிட்ட அஜித் ரசிகர்கள்

சென்னை:
இன்று அப்டேட் வரும்… வரும்… என்று தயாரிப்பு நிறுவனம் கூறியதை ரெக்கார்ட் செய்து இணையத்தில் பதிவேற்றி உள்ளனர் அஜித் ரசிகர்கள்.

அஜித்தின் விஸ்வாசம் படம் வருகிற பொங்கலுக்கு பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாக உள்ளது. இந்த படத்தை சிவா இயக்கத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

நீண்ட நாட்களாக அப்டேட் எதுவும் வராமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். இதில் சிலர் நேரடியாக சத்ய ஜோதி பிலிம்ஸின் அலுவலகத்திற்கே போன் செய்துள்ளனர்.

அதில் நாளை (இன்று) அப்டேட் வரும் என அவர்கள் கூறியுள்ளனர். அதை ரசிகர்கள் அப்படியே வாய்ஸ் ரெக்கார்ட் செய்து வெளியிட்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!