தரமணி ஹீரோவின் அடுத்தப்படம் ராக்கி

ராம் இயக்கிய தரமணி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வசந்த் ரவி. முதல்படத்திலேயே வித்தியாசமான வேடத்தில் நடித்து பாராட்டை பெற்றவர், அடுத்தப்படத்தில் நடிக்க அவசரம் காட்டாமல் பொறுமையாக கதை கேட்டு வந்தார்.

இந்நிலையில், ராக்கி என்ற படத்தில் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் சொன்ன கதை பிடித்து போக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். தர்புகா சிவா இசையமைக்கிறார். ஆர்ஏ ஸ்டுடியோஸ் சார்பில் சிஆர்.மனோஜ் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர் அனிருத், டுவிட்டரில் வெளியிட்டார்.

Sharing is caring!