தற்காப்பு கலை கற்க தாய்லாந்து பறக்கிறார் சிம்பு

சென்னை:
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலைகளை கற்க தாய்லாந்து செல்கிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய படத்திற்காக நடிகர் சிம்பு தற்காப்பு கலைகளைக் கற்க உள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், நடிகர் சிம்பு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்காக தற்காப்பு கலைகள் கற்க, சிம்பு தாய்லாந்து செல்ல உள்ளார். ‘மாநாடு’ படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்கிறார். சமீபத்தில் சிம்பு பிறந்த நாளன்று பிரமாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பில் எளிமையாக பூஜை செய்து படப்பிடிப்பைத் தொடங்க சிம்பு கேட்டுக் கொண்டார்.

இந்தப் படம் அரசியல் திரில்லராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!