தற்கொலை வேண்டாம்…உதவி மையத்துடன் விஷால்

இளைஞர்களின் தற்கொலைகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனியார் தொண்டு நிறுவனத்துடன் நடிகர் விஷால் இணைந்து பணியாற்றவுள்ளார்.

பள்ளி மற்றும் பணியிடங்களில் ஏற்படும் உளவியல் ரீதியான  பிரச்னைகளால்  தற்கொலை முயற்சியில் ஈடுபடும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறார். இது போன்ற தற்கொலைகளை தடுக்கும் வண்ணம் பல  தொண்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ஆலோசனை மையம் நடத்தி வருகின்றன.

அதன் படி நடத்தப்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனத்துடன் விஷால் கை கோர்த்துள்ளார். மேலும் இந்நிறுவனத்தின் ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்வதற்கான எண்ணினை விஷால் தனது வீடியோ மூலம் அறிமுகப்படடுத்தியுள்ளார். இந்த வீடியோ வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Sharing is caring!