தற்போது மீண்டும் இளவட்ட இசையமைப்பாளர்களின் இசையில் எஸ்.பி.பி

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பி.யின் குரலை கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட பாடல்களில் அதிகமாக கேட்கமுடியவில்லை. தற்போது மீண்டும் இளவட்ட இசையமைப்பாளர்களின் இசையில் பரவலாக பாடத் தொடங்கியிருக்கிறார்.

அந்த வகையில், தமிழில், வெங்கட்பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படத்தில் பிரேம்ஜி இசையில் ஒரு பாடல் பாடியவர், அதையடுத்து கார்த்தி நடித்துள்ள தேவ் படத்திற்காகவும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியுள்ளார்.

தற்போது தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கும் லட்சுமியின் என்டிஆர் படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்த படத்திற்கு கல்யாணி மாலிக் இசையமைக்கிறார்.

Sharing is caring!