தலைகீழாக நின்றாலும விஜய், எம்ஜிஆர் ஆக முடியாது… அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை:
தலைகீழாக நின்றாலும் விஜய் எம்ஜிஆர் ஆக முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் பொங்கி எழுந்துள்ளார்.

முருகதாஸ் – விஜய் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி பல சர்ச்சைகளை தாண்டி தீபாவளிக்கு வெளியான சர்கார் படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் கூறியது போலவே சர்கார் படத்தில் அரசியல் மெர்சலாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் தற்போது எதிர்ப்புகளாக, கண்டனங்களாக வந்து கொண்டு இருக்கிறது.

சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர்.

இதற்கு ஒரு படி மேலே சென்று தனியரசு இயக்குனர் முருகதாஸ், விஜய் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், எம்.ஜி.ஆரை போல் யாராலும் வர முடியாது. நடிகர் விஜய் அழுது புரண்டாலும், தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என விமர்சித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!