தலையில் குல்லா அணிந்து நகர் வலம் வந்த ரஜினி… ரசிகர்கள் கண்டுபிடித்தனர்

சென்னை:
ரஜினி ஸ்வெட்டர் போட்டு தலையில் குல்லா அணிந்து கண்டுபிடிக்க முடியாதபடி நியூயார்க் நகரில் பொது இடத்திற்கு சென்ற போது ரசிகர்கள் பார்த்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான பேட்ட வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வரவுள்ளது. சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த 2.0 வெளியாகி பெரும் வசூல் சாதனை நிகழ்த்தி விட்டது.

இதற்கிடையில் ரஜினி ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. ரஜினி ஸ்வெட்டர் போட்டு தலையில் குல்லா அணிந்து கண்டுபிடிக்க முடியாத படி நியூயார்க் நகரில் பொது இடத்திற்கு சென்றுள்ளார்.

ஆனாலும் அவரின் அடையாளம் கண்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!