தலைவர் 166 ல் இணையும் பேட்ட பிரபலம்

‘பேட்ட’ திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பளராக இருந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர்  நிஹாரிக்கா பாசின் தலைவர் 166ல் இணந்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 166’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.  மேலும், ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் இசையமைத்த ராக்ஸ்டார் அனிருத்  இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

இந்நிலையில்  ‘பேட்ட’ திரைப்படத்தில் பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் நிஹாரிக்கா பாசின், ‘தலைவர் 166’ திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளாராக இணைந்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், கபாலி புரொமோஷனுக்கு பயன்படுத்தப்பட்ட விமானத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, விடுமுறை கொண்டாட இந்த விமானத்தில் கோவா செல்கிறேன்.  ஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி சார் இணையும் படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!