தலைவி… ஜெ., வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு

சென்னை:
தலைவி என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., வின் வாழ்க்கை வரலாறு படம் உருவாகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து படத்தை இயக்குனர் விஜய் உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் தலைப்பை ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று வெளியிட்டுள்ளார்.

தலைவி என்று பெயர் வைத்துள்ள விஜய், அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நிரோஷா ஒளிப்பதிவு செய்கிறார். தலைவி படத்தை வைப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!