தளபதியின் இளைய தளபதி வருகிறார்

விஜய்யின் மகன் சஞ்சய், விஜய் நடித்த, வேட்டைக்காரன் படத்தில், ஒரு பாடலில் நடித்தார். அதையடுத்து, எந்த படத்திலும் நடிக்காத அவர், இன்னும் சில ஆண்டுகளில், நாயகனாக சினிமாவில், ‘என்ட்ரி’ கொடுக்கப் போகிறார்.

தற்போது, 18 வயதாகும் சஞ்சய்க்கு, சினிமாவுக்கு தேவையான நடனம், சண்டை என அனைத்து கலைகளிலும் பயிற்சி கொடுத்து வருகின்றனர். மேலும், மெர்சல் படத்திற்கு பின், ‘இளைய தளபதி’ என்ற தன் பட்டத்தை, ‘தளபதி’ என்று மாற்றிய விஜய், ‘இளைய தளபதி’ பட்டத்தை, மகனுக்கு கொடுக்கப் போவதாகவும், கூறுகிறார்.

Sharing is caring!