தளபதி சோ கூல்… ஸ்டைலிஸ்… டுவிட்டரில் புகழ்ந்த தயாரிப்பாளர்

சென்னை:
நம்ம தளபதி சோ கூல், ஸ்டைலிஷ், வேற லெவல், மாஸ் என டுவிட்டரில் தேனாண்டாள் நிறுவன தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி குறிப்பிட்டுள்ளார்.

விஜய்க்கு எப்போதும் மாஸான பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தங்களின் பலம் என்ன என்பதை விட அவரின் மீது தங்கள் நேசம் எவ்வளவு என்பதை காட்டிவிடுகிறார்கள்.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு சர்கார் படம் ரிலீஸாகவுள்ளது. படத்திற்கு முந்தைய வியாபாரமே ரூ.200 கோடிகள் பெற்று விட்டது. இனி தியேட்டர்களில் பணமழை என்பது போல பட வசூல் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வருடம் இதே போல வசூலை அள்ளிய படம் மெர்சல். இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது சர்கார் புரமோவை பார்த்துவிட்டு அந்நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி நம்ம தளபதி சோ கூல், ஸ்டைலிஷ், வேற லெவல், மாஸ் என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!