தளபதி 63…..கதை கசிந்தது

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் கதை கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். இவர்களுடன் கதிர், யோகி பாபு, விவேக், இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து  வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளாக, தன்னுடைய நண்பனான கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் கதிரை கொலை செய்து விடுவதால் அந்த கொலைக்கார கும்பலை எப்படி விஜய் பழிவாங்குகின்றார் என கதை நகர்கின்றது. கதிரை கொலை செய்யும் கும்பல் விஜயையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்கின்றது. இதனால் விஜய் தாக்கப்பட்டு சக்கர நாட்காலியில் அமரும் நிலைக்கு சென்று விடுகின்றார். இப்படியான நிலையில் கதிரின் குழுவினர் எப்படி வெற்றி பெற வைக்கின்றார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கதையாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருவதுடன், football stadium எனும் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

Sharing is caring!