தளபதி 63 படப்பிடிப்பில் சுவாரசியங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர்களிடம் விஜய் நடந்து கொண்ட விதம் குறித்த போட்டோக்களும், வீடியோக்களும் சமீபத்தில் வைராலாகி வருகிறது.

மெர்சலுக்குப் பிறகு அட்லி இயக்கும் புதிய படத்திலும் ஹீரோவாக நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 63-வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு அட்லீ – விஜய் காம்போவில் வெளியான முந்தைய படங்களில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எடிட்டர் ரூபன் ஆகியோர் இந்தப் படத்திலும் இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது தன்னைக் காண வரும் ரசிகர்களிடம் விஜய் நடந்து கொள்ளும் விதம் குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு தளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் ரசிகர்களிடையே ஏற்பட்ட தள்ளு முள்ளால் வேலி சரிந்துள்ளது. அப்பொழுது விஜய் வேகமாக சென்று வேலியை தாங்கி பிடிக்கும் காட்சி அடங்கிய வீடியோவை இணையத்தில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Sharing is caring!