‘தளபதி 63’

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாததினால் இந்தப் படத்தை, தற்போது ‘தளபதி 63’ என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட்டராகவும், முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் படம் இது.

அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு ‘தளபதி 63’ படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’ 2017 – ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. ‘சர்கார்’ 2018 – ஆம் ஆண்டு தீபாவளிக்கும் ரிலீஸானது.

2019 தீபாவளிக்கு ‘தளபதி 63’ வெளியாவதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக விஜய் படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையில் இந்தப்படத்தின் பெயர் ஜெர்ஸி 63 என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

Sharing is caring!