தள்ளிப் போகுமா தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்?

சென்னை:
தள்ளிப் போகுமா தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஷால் செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறார். நடிகர் நாசர் தலைவராக இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறவிருக்கும் தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படவேண்டும்.

தற்போது நிர்வாகிகளாக உள்ளவர்களின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. ஏற்கனவே விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பேன் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால் வழக்குகளால் கட்டிட பணிகள் தாமதமாகி போகிறது.

இதனால் தேர்தலை தள்ளிவைக்க நினைக்கிறார்களாம். மேலும் சங்க உறுப்பினர்களும் மண்டப பணிகள் முடித்த பிறகே தேர்தலை நடத்த வலியுறுத்துகிறார்களாம். இதனால் வரும் 19ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார்களாம். அப்போது என்ன முடிவு என்பது தெரிந்து விடும் என்கிறார்கள்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!