தள்ளி போகிறது ஜி.வி. பிரகாசின் சர்வம் தாளமயம் படம்

சென்னை:
ஜி.வி. பிரகாசின் சர்வம் தாளமயம் படம் தள்ளி போகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் விஜய் ரசிகராக நடித்துள்ள படம் சர்வம் தாளமயம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை 28ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது படம் தள்ளிப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வாரம் பல படங்கள் வெளிவந்துள்ள நிலையில் உடனே படம் வெளியிடுவதற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தான் இப்படி ஒரு முடிவெடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!