தவறான செய்தி… என் திருமணம் பற்றி தவறான செய்தி பரவி வருகிறது… நடிகர் விஷால் கோபம்

சென்னை:
தவறான செய்தி… என் திருமணம் பற்றி தவறான செய்தி பரவி வருகிறது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என சமீபத்தில் தகவல் பரவியது. இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் என்றும் செய்திகள் உலா வந்தது.

இந்நிலையில் நடிகர் விஷால் இதுபற்றி ட்விட்டரில் கோபமாக பதிவிட்டுள்ளார்.

“என்னுடைய திருமணம் பற்றி தவறான செய்திகள் ஊடகங்களில் கட்டுரைகள் மூலம் பரப்பப்படுவது ஆச்சர்யமாக உள்ளது. இது சரியில்லை. இது என்னுடைய சொந்த வாழ்க்கை, என் திருமணம் பற்றி நானே அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!