தவறுதலானது… அந்த செய்தி தவறுதலானது… சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்

சென்னை:
தவறுதலானது… தவறுதலானது அந்த செய்தி தவறுதலானது என்று லைகா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனது 37வது படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்டத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர் போமன் இரானி, தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் சமுத்திரகனி என தென்னிந்தியாவையே கவரும் விதமாக நடிகர்களை தேர்வு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்டத்தின் படப்பிடிப்பு லண்டனில் ஜுன் 25 தொடங்கி நடைப்பெற்று கொண்டிருக்கிறது. முதல் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத சூர்யா தற்போது லண்டன் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில் லண்டனில் உள்ள ஜிப்சன் ஹால், 13 பிஷோப்கேட் லண்டன் EC2N 3BA என்ற இடத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சூர்யா மற்றும் படக்குழுவினரை இலவசமாக பார்க்கலாம் என ஒரு அறிவிப்பை லைகா தரப்பில் இருந்து சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

ஆனால் தற்போது செய்தி என்னவென்றால், “தவறுதலுக்கு மன்னிக்கவும், அந்த செய்தி தவறுதலானது” என லைகா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் சூர்யாவை நேரில் பார்க்கலாம் என்றிருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்துள்ளது

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!