“தாதா 87” தேசிய விருதுக்கு பரிந்துரை

நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரரும் நடிகருமான சாருஹாசன் நடிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் திரைக்கு வந்த படம் ‘தாதா 87’. இந்த திரைப்படத்தில்,  சாருஹாசனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி நடித்துள்ளார்.  தவிர ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி  உள்ளிட்டோர் தாதா 87-ல் நடித்துள்ளனர்.

சாருஹாசன் தாதாவாகவும், ஜனகராஜ் ஓய்வுப் பெற்ற ராணுவ அதிகாரியாக, ஹீரோயினின் அப்பாவாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரை வைத்துத் தான் ‘தாதா 87’ இயக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே இயக்குநர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்து, தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.


இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது  பரிந்துரை பட்டியலில், ‘தாதா 87’ல் திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீ பல்லவிக்கு, சிறந்த நடிகைக்கான  விருது பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தாதா 87 படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing is caring!