தாயின் பாசத்துக்காக ஏங்கிய இலங்கையை சேர்ந்த தமிழ் நடிகை!

பிரபல தொலைக்காட்சியின் குடும்ப விருதுகளில்“சிறந்த வில்லிக்கான” விருதை வென்றுள்ளார் நடிகை ஷாமிலி.

இலங்கையை தாயகமாக கொண்ட ஷாமிலியின் குடும்பம் உள்நாட்டு போரின் காரணமாக தமிழ்நாட்டில் குடியேறியது.

தனக்கு நடிக்க விருப்பம் இருந்தாலும் அவருடைய அம்மாவுக்கு சினிமா துறை சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

இதனால் தன்னை ஒதுக்கியே பார்ப்பதாகவும், தனது தங்கைக்காக சமைத்து தரும் அம்மா தனக்காக சமைக்கவில்லை என சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சியொன்றில் கூறி கதறி அழுதார்.

இந்நிலையில் ரோஜா சீரியலுக்காக சிறந்த வில்லி நடிகை வென்றுள்ள ஷாமிலிக்கு மேடைக்கே வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார் அவரது அம்மா.
அத்துடன் தன் கையால் செய்து வந்த கேசரியை மகளுக்கு ஊட்டிவிட அரங்கமே நெகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

Sharing is caring!