திட்டமிட்டபடி காட்சிகளை படமாக்குவதில் சுணக்கம்

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர் முதல் வாரத்துடன் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் திட்டமிட்டபடி காட்சிகளை படமாக்குவதில் சுணக்கம் ஏற்பட்டதால் மேலும் சில வாரம் படப்பிடிப்பு நீடிக்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

சென்னை, ஐதராபாத், மும்பை என பல்வேறு இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டாலும் 75 சதவிகித காட்சிகள் ஐதராபாத்திலேயே படமாக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தில் தெலுங்கு டச் அதிகமாக இருப்பதால் தெலுங்கு டப்பிங் ரைட்ஸ் பெரிய விலைக்குப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில், விவேக், ‘யோகி’ பாபு, தம்பி ராமையா, ‘ரோபோ’ சங்கர் என ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் நடித்திறுக்கிறார்கள்.

பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது விஸ்வாசம். பொங்கலுக்கு பேட்ட ரிலீஸ் ஆனால் ‘விஸ்வாசம்’ படம் ஜனவரி கடைசியில் அல்லது பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

Sharing is caring!