திமிரு புடிச்சவன் படம் என்னுடைய கதை… ராஜேஷ் குமார் டென்ஷன்

சென்னை:
திமிரு புடிச்சவன் படம் என்னுடைய கதை என்று பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் திமிரு புடிச்சவன் படம் வெளியானது. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் கிரைம் ஸ்டோரி நாவல் எழுத்தாளர் ராஜேஷ் குமார் அப்படம் தன்னுடைய கதை என கூறியுள்ளார்.

கடந்த வருடம் அவர் இணையத்தில் எழுதிய ஒன்ூஒன் ஸ்ரீ ஜீரோ தொடர்கதையின் அடிப்படை தான். இதில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை மூளை சலவை செய்து தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்ய வைத்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன்.

அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து ‘திமிரு பிடித்தவன்’ திரைப்படத்தை எடுத்துள்ளார்கள். இவர்கள் எப்போது திருந்துவார்கள்?’ என அவர் கொந்தளித்திருக்கிறார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!