திமுக தலைவர் மரணம்… பிக்பாஸ் வீட்டில் சோகம்

சென்னை:
பிக்பாஸ் வீட்டில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மரணம் குறித்து தெரிவிக்கபட்டது. இதை கேட்டு மஹத் உடைந்து விட்டார். காரணம் கருணாநிதியின் பேரன் துரைதயாநிதி அழகிரி அவரது நெருங்கிய நண்பராம்.

முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது இறுதி சடங்குகள் நடைபெற்று, மெரினாவில் அண்ணா சமாதி அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவு பற்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதை கேட்டு பலரும் அதிர்ச்சி ஆகினர்.
நடிகர் மஹத் பேசும்போது ” துரை தயாநிதி அழகிரி எனக்கு நெருங்கிய நண்பர். இந்த சமயத்தில் அவர் அருகில் இருக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது” என கூறினார்.

தயாநிதி அழகிரி பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!