திருச்சூர் பாஷை பேசும் மோகன்லால்

தமிழ் சினிமாவில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை என நம்ம ஊர் ஹீரோக்கள் பல பாஷைகளில் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம், காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான். கேட்பதற்கும் கூட அவை வித்தியாசமாக இருக்கும். ‘ராஜமாணிக்கம்’ படத்தில் மம்முட்டி பேசிய திருவனந்தபுரம் பாஷையை ரசிக்காதவர் கேரளாவில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்.

அப்படித்தான் 31 ஆண்டுகளுக்கு முன் தூவானத்தும்பிகள்’ படத்தில் மோகன்லால் பேசிய திருச்சூர் பாஷை ரசிகர்களால் ரொம்பவே வரவேற்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மோகன்லால் தான் நடிக்கவுள்ள ‘இட்டிமாணி – மேட் இன் சைனா’ என்கிற படத்தில் மீண்டும் திருச்சூர் பாஷை பேசவுள்ளாராம். கதைப்படி திருச்சூர் அருகில் உள்ள குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவராக இதில் மோகன்லால் நடிக்கிறாராம்.

Sharing is caring!