திருமணத்தின் பின்னரும் ஜொலிக்கும் நாயகி

வாரணம் ஆயிரம் திரைப்படத்தில், மகன் சூர்யாவுடன் டூயட் பாடியவர் சமீரா ரெட்டி, தெலுங்கு படங்களில் பிசியாக இருந்ததாக, தமிழ் படங்களில் அதிகம் நடிக்கவில்லை. எனினும், இங்கு அவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கென தனி ரசிகர் படையே உள்ளது.

தொழில் அதிபரை திருமணம் செய்து செட்டில் ஆன அவர், அதன் பின் திரைப்படங்களில் நடிக்க வரவில்லை. இது, அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில், சமீரா ரெட்டி, சமூகவலைதளத்தில் தன் உடல் எடை குறித்தும், தோற்றம் குறித்தும் தன் புகைப்படத்துடன் ஓர் பதிவிட்டுள்ளார். அதில், திருணத்திற்குப் பின், தன் உடல் எடை, 102 கிலோவை எட்டியதாகவும், 2 ஆண்டு கடும் உடற்பயிற்சிக்குப் பின், தன் உடல் எடையை குறைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவுடன் தனது பழைய மற்றும் தற்போதைய புகைப்படங்களை பதிவு செய்துள்ள சமீரா, நான் இந்தப் பதிவை பெண்களுக்காகப் பதிவிடுகிறேன். மகப்பேறு காலத்தில் ஹார்மோன் மாற்றம், மனநிலை மாற்றம் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறோம். நம் மனநிலை மாற நாம் தான் முயற்சி செய்ய வேண்டும் என கருத்திட்டுள்ளார்.

தற்போது, பழைய சமீராவாக சிக்கென மின்னுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இது, சமீராவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையால் மீண்டும் ஓர் வலம் வருவார் போலிருக்கே….!

Sharing is caring!