திருமணத்தின் பின் சமந்தா- சைத்தன்யா ஜோடி

மகாநடி படத்திற்குப் பிறகு நாகசைத்தன்யா ‘சவ்யாசச்சி’ மற்றும் ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ என 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  தற்போது, மற்றொரு புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதனை இயக்குநர் சிவநிர்வனா இயக்குகிறார்.

இதில் ஹீரோயினாக முன்னணி நடிகையும், நாகசைத்தன்யாவின் காதல் மனைவியுமான சமந்தா நடிக்கிறார். ‘ஏ மாய சேசவே, மனம், ஆட்டோநகர் சூர்யா’ ஆகிய படங்களில் நாகசைத்தன்யா – சமந்தா இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு மகாநடி படத்தில் நடித்திருந்தாலும், தாத்தா நாகேஷ்வர ராவ் கதாப்பாத்திரத்தில் சைத்தன்யாவும், மதுரவாணியாக சமந்தாவும் நடித்திருந்தார்கள்.

ஆக திருமணத்திற்குப் பிறகு ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது தான். இந்த ரியல் ஜோடிகளை ரீல் கதாப்பாத்திரங்களில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

பெயரிடப்படாத இந்தப் படம் நாகசைத்தன்யாவின் கரியரில் 17-வது படம். இன்று இந்தப் படத்திற்கான பூஜை ஹைதராபாத்தில் போடப்பட்டுள்ளது. தற்போது அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Sharing is caring!