திருமணம் செய்வதில் முக்கிய முடிவு… இது நயன்தாராவின் முடிவாம்

சென்னை:
திருமணம்… 100 படங்கள் நடித்த பின்னர்தான் திருமணம் செய்வாராம் நயன்தாரா என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, 100 படங்களில் நடித்த பிறகே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் 63-வது படமாக ஐரா உருவாகி இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள மிஸ்டர்.லோக்கல், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், நிவின் பாலியுடன் லவ் ஆக்‌‌ஷன் டிராமா படங்கள் இருக்கின்றன.

இவை தவிர விஜய் – அட்லி இணையும் தளபதி 63 படத்திலும் நாயகியாக நடிக்கிறார். அறிவிப்பு வந்தவை தவிர சுமார் 10 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். எனவே இந்த ஆண்டு நயன்தாரா திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கின்றனர்.

நயன்தாராவுக்கு இப்போது வயது 34. நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிப்பதும் ஒன்றாக வாழ்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. எப்போதுதான் இவர்கள் திருமணம் நடக்கும்? என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஆனால் நயன்தாரா மனதிலோ 100 படங்களை தொடுவதை இலக்காக வைத்துள்ளார் என்கிறார்கள். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைந்த பின்னர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாராம். என்னவோ போங்க.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!