திருமணம் நவ-14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இத்தாலியில் நடைபெற உள்ளது.

பாலிவுட்டில் அடுத்ததாக திருமணத்தில் இணையவுள்ளது ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடிதான். நீண்ட நாட்களாகவே காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இந்த ஜோடி ஒரு வழியாக திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இவர்களது திருமணம் நவ-14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இத்தாலியில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் பாலிவுட்டை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதேசமயம் இவர்கள் இருவரது திரையுலகத்தில் முக்கியமான படங்களை கொடுத்துவரும், இவர்கள் இருவருடனும் மிகுந்த நட்பில் இருப்பவருமான இயக்குனர் ரோஹித் ஷெட்டி இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

தற்போது சிம்பா என்கிற படத்தை இயக்கியுள்ள ரோஹித் ஷெட்டி அதன் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் என்றும், அதுமட்டுமல்ல ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பையும் செய்து வருவதால் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார் என்றும் சொல்லபடுகிறது. அதேசமயம் நவ-28ல் மும்பையில் நடைபெறவுள்ள திருமண வரவேற்பில் இவர் நிச்சயம் கலந்துகொள்வார் என்று தெரிகிறது

Sharing is caring!