திருமணம் நெருங்கும் வேளை விஷாலுக்கு நடந்த சோகம்

விஷால் நடித்த ‘அயோக்யா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வரும் ஏப்ரலில் இந்த படம் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றபோது எதிர்பாராத வகையில் விஷாலின் கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று விஷால் சிகிச்சை பெற்றுள்ளார். விஷால் கையில் கட்டுடன் உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், திருமணம் நெருங்கும் நேரத்தில் கவனமாக படப்பிடிப்பில் இருக்குமாறு அறிவுரை தெரிவித்து வருகின்றனர். மேலும் விரைவில் அவர் குணமடையவும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஷால்-சுந்தர் சி படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடந்து வரும் நிலையில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி துருக்கி படப்பிடிப்பு தொடரும் என்றும், விஷால் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Sharing is caring!