திரும்பிப் பார்க்க வைக்கும் மணிரத்னம்

கடந்த 35 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருபவர் இயக்குநர் மணிரத்னம். இந்திய அளவில் உள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இவர், தற்போது செக்கச்சிவந்த வானம் என்ற மல்டி ஹீரோ கதையை இயக்கியிருக்கிறார். அரவிந்த் சாமி, சிம்பு, விஜயசேதுபதி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா ஹரப்பா என பலர் நடித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய படங்களில் நாயகன் குறிப்பிடத்தக்க படமாகும். கமல்ஹாசன் நடித்த இந்த படம் மும்பையை பின்னணியாக கொண்ட கதையில் தாதாயிசத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருந்தது.

சமீபகாலமாக அதிலிருந்து மாறுபட்ட கதைகளாக இயக்கி வந்த மணிரத்னம், நீண்ட இடைவேளைக்குப்பிறகு தற்போது இயக்கியுள்ள செக்கச்சிவந்த வானம் படத்தையும் தாதாயிசத்தை மையப்படுத்தி இயக்கியிருக்கிறார். இதில் முக்கிய தாதாவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், 1987ல் இயக்கிய நாயகன் இன்று வரை இந்திய சினிமாவில் ஒரு சிறந்த படமாக கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த செக்கச்சிவந்த வானம் படமும் நாயகன் படத்தை திரும்பிப்பார்ப்பது போல் உருவாகியுள்ளது என்று சொன்னார்.

Sharing is caring!