திரையுலகை பொறுத்தவரை தளபதி விஜய்தான்… உதயநிதி சொல்றார்

சென்னை:
திரையுலகை பொறுத்தவரை எப்போதும் தளபதி விஜய்தான் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிஸியாக இருக்கும் இவர் விரைவில் தான் நடித்த கண்ணே கலைமானே படத்தையும் ரிலிஸ் செய்யவுள்ளார்.

இந்நிலையில் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் எல்லோரும் விஜய்யை தளபதி என்றே அழைத்தனர். அதற்கு ஒரு ரசிகர் உதயநிதியிடம் டுவிட்டரில் ‘யார் உண்மையான தளபதி?’ என்று கேட்டுள்ளார். ஸ்டாலினையும் தளபதி என்று தான் அழைப்பார்கள்.

அதற்கு உதயநிதி ‘திரையுலகை பொறுத்தவரை எப்போதும் தளபதி விஜய் தான், தல அஜித் தான்’ என்று பதில் அளித்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!