திலீப்பை இயக்கும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்

மலையாளத்தில் மோகன்லாலின் வலதுகரம் என்றும் சொல்லப்படும் அளவிற்கு மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக விளங்குபவர் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். கடந்த வருடம் மோகன்லால், விஷாலை வைத்து வில்லன் படத்தை இயக்கியவர். அடுத்து படம் எதுவும் எடுக்காமல் இடைவெளி விட்டிருந்தார். ஆனால் இந்த இடைவெளி அவர் திலீப்பை வைத்து அடுத்த படம் பண்ணுவதற்கான கதையை தயார் செய்வதற்குத்தான் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

திலீப்பை பொறுத்தவரை நடிகை வழக்கில் கைதாகி சிறை சென்று ஜாமினில் வெளியே வந்த பின்பு புதிய படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்ட படங்களை மட்டுமே அவர் முடித்துக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவர் கைவசம் இருக்கும் ஒன்றிரண்டு படங்களையும் முடித்துவிட்டு, அடுத்ததாக உன்னிகிருஷ்ணன் படத்தில் தான் நடிக்க இருக்கிறாராம். இதன் படப்பிடிப்பை ஜூலை மாதம் துவங்கி, கிறிஸ்துமஸ் வெளியீடாக படத்தை வெளியிட இருக்கிறார்கள் என தெரிகிறது.

Sharing is caring!