திலீப்பை எதிர்த்து விலகிய நடிகைகளுக்கு பிருத்விராஜ் பாராட்டு..!

நடிகை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப்பை கடந்த வருடம் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கி வைத்தனர்.. சில தினங்களுக்கு முன் மீண்டும் கூடிய பொதுக்குழுவில் திலீப் நடிகர் சங்கத்தில் மீண்டும் தொடர்வார் என அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீத்து மோகன்தாஸ் உள்ளிட்ட சில நடிகைகள் சங்கத்திலிருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள்.

“இவர்களின் இந்த தைரியமான முடிவை நடிகர் பிருத்விராஜ் பாராட்டியுள்ளார். “எந்த சூழலில் இவர்கள் இப்படி ஒரு தைரியமான முடிவை எடுத்துள்ளார்கள் என நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. இவர்களது முடிவை வரும் நாட்களில் பல விமர்சிக்கலாம். ஆனால் இவர்களுக்கு பக்கபலமாக எப்போதும் நான் இருப்பேன்” என கூறியுள்ளார் பிருத்விராஜ்.

கடந்த வருடம் கடத்தல் வழக்கில், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் பிருத்விராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!