திலீப் ஆதரவாளர்களின் சந்தேகத்தை போக்கிய மோகன்லால்

மலையாள திரையுலகில் மோகன்லாலுக்கும் திலீப்புக்கும் கடந்த சில வருடங்களாகவே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்றும், இருவருக்கும் இடையே அறிவிக்கப்படாத ஓர் பனிப்போர் நடக்கிறது என்றும், அதனால் தான் திலீப்-காவ்யா மாதவனின் திருமணத்திற்கு மோகன்லால் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறார் என்கிறபோதுதான், திலீப்புக்கும் மஞ்சுவுக்கும் இடையே மனக்கசப்பு ஆரம்பித்தது. அப்போது மஞ்சு வாரியாருக்கு மோகன்லால் ஆதரவுக்கரம் நீட்டினார் என்பதால் மோகன்லாலிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திலீப் தூர விலகிப்போனார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் இந்த சந்தேகத்தையெல்லாம் உடைக்கும் விதமாக சமீபத்தில் மோகன்லால் மலையாள நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டபின் முதல் வேலையாக சங்கத்திலிருந்து விலக்கப்பட்ட திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்து நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்மூலம் திலீப்புக்கு தான் எதிரானவன் அல்ல என்பதை மோகன்லால் சூசகமாக உணர்த்தியுள்ளார் என திரையுலகினர் ஆச்சர்யமாக பேசிவருகிறார்கள்.

Sharing is caring!