தில்லாக தனது கருத்துக்களை சொல்லும் அமலா

அமலாபாலை பொறுத்தவரை சினிமாவில் தனது கேரக்டர்களை தேர்ந்தெடுப்பதாகட்டும், நிஜவாழ்வில் தன்னுடைய கேரக்டர் இதுதான் என வெளிப்படுத்துவதாகட்டும், தில்லாக தனது கருத்துக்களை சொல்ல தயங்கமாட்டார். அந்தவகையில் மலையாள திரையுலகை சுழன்றடிக்கும் நடிகை கடத்தல் பிரச்சனை, தெலுங்கு, தமிழை சுழன்றடிக்கும் ஸ்ரீரெட்டி லீக்ஸ் பிரச்னை இவை எல்லாவற்றிலும் தனது பதிலை முன் வைக்கிறார் அமலாபால்.

சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பெண்கள் பலமான மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.. பலவீனமான மனம் கொண்டவர்களுக்கு சினிமா துறை செட்டாகாது. மற்ற துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் சினிமாவில் இருக்கும் பெண்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார் அமலாபால்.

Sharing is caring!