தில்லுக்குத்துட்டு-2

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்குத்துட்டு, சக்கபோடு போடு ராஜா என சந்தானம் நாயகனாக நடித்த படங்கள் வெளியானது. அதையடுத்து ஒரே நேரத்தில் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கனும், மன்னவன் வந்தானடி, தில்லுக்குத்துட்டு-2 என நான்கு படங்களில் நடித்து வந்தார்.

ஆனபோதும் கடந்த 2018 ம் ஆண்டில் சந்தானம் நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது ராம்பாலா இயக்கத்தில் அவர் நடித்துள்ள தில்லுக்குத்துட்டு 2 படம் ஜனவரியில் வெளியாகயிருப்பதாக அறிவித்துள்ளனர்.

தில்லுக்குத்துட்டு படத்தைப்போலவே பேய் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானத்துடன் ஷிரிதா ஷிவதாஸ், ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Sharing is caring!