தி க்ரைம்ஸ் ஆப் கிரைண்டெல்வெல்ட் என்ற ஹாலிவுட் படம் கணிசமான தியேட்டர்களில் வெளிவருகிறது

காற்றின்மொழி, செய், சித்திரம் பேசுதடி 2, உத்தரவு மகாராஜா படங்கள் நாளை வெளிவரும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. ஆனால் அந்த அறிவிப்பை மீறி விஜய் ஆண்டனியின் திமிருபுடிச்சவன் படம் வெளிவருகிறது. இதனால் செய், சித்திரம் பேசுதடி 2 படங்கள் அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போய் இருக்கிறது. இப்படி ஒரு குழப்பம் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், தி க்ரைம்ஸ் ஆப் கிரைண்டெல்வெல்ட் என்ற ஹாலிவுட் படம் கணிசமான தியேட்டர்களில் வெளிவருகிறது. ஹாலிவுட் படங்களுக்கு மினிமம் கியாரண்டி வசூல் இருப்பதால் தியேட்டர்காரர்களும் அந்தப் படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தி க்ரைம்ஸ் ஆப் கிரைண்டெல்வெல்ட் என்ற இந்தப் படம் பெண்டாஸ்டிக் பீட்ஸ் படத்தின் வரிசையில் 2ம் பாகம். டேவிட் யாட்ஸ் இயக்கி உள்ளார். எட்டில் ரெட்மியன், கேத்திரின் வாட்டர்ஸ்டன், டான் பாக்லர், எலிசன் சோல் நடித்துள்ளனர். ஜேம்ஸ் நியூட்டன் ஹாவர்ட் இசை அமைத்துள்ளார், பிலிப்பி ரசல்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். வார்னர்ஸ் பிரதர்ஸ் தயாரித்துள்ளது. இது ஹாரிபார்ட்டர் பாணியிலான மாயாஜாலங்கள் நிறைந்த பேண்டசி படம். தமிழிலும் 3டி மற்றும் 3டி ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது.

Sharing is caring!