தீபாவளிக்கு சர்க்கார் – ஆன்லைனில் டிக்கெட்

விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. டிக்கெட் புக்கிங் ஆன்லைனில் 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். குறைந்தபட்சம் 40 ரூபாய், அதிகபட்சம் 100 ரூபாய் மட்டுமே சட்டப்படி வசூலிக்க வேண்டும். இக்கட்டணம் ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு உட்பட்டது. எனவே இஷ்டத்துக்கு வசூலிப்பதை தடுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உசிலம்பட்டி மகேந்திரபாண்டி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இம்மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மதுரை கலெக்டர் நடராஜன் தாக்கல் செய்த அறிக்கையில், நவ.,6 முதல் 13 வரை திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கண்காணிக்க தணிக்கைக்குழு அமைக்கப்பட்டுள்ளது, என குறிப்பிட்டிருந்தார்.

வழக்கின் கூடுதல் தகவலுக்காக விசாரணையை இன்று (நவ.,1) ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சர்கார் படம் தொடர்பாக மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த தியேட்டர்களின் உரிமம் ரத்து செய்ய வேண்டும். படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Sharing is caring!