தீபாவளி ரேசில் பங்கேற்கிறது களவாணி மாப்பிள்ளை

சென்னை:
தீபாவளி ரேசில் களவாணி மாப்பிள்ளை படமும் பங்கேற்கிறது…  பங்கேற்கிறது… என்று அறிவித்து இருக்காங்க.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு போட்டியாக சில படங்கள் களத்தில் குதித்துள்ளன.

ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகராக நடித்திருக்கும் பில்லா பாண்டி, விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் படங்கள் ரிலீஸ் ஆவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தீபாவளி ரேஸில் புதியதாக தேவயானி, அட்டக்கத்தி தினேஷ், அதிதி மேனன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் சர்கார் போன்ற பெரிய படத்தை எதிர்த்து திரையிட்டாலே நன்றாக ப்ரோமோஷன் ஆகும் என்பது களவாணி மாப்பிள்ளை படக்குழுவின் எண்ணமாக கூட இருக்கலாம் என்கின்றனர் கோலிவுட்டில்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!