தீபிகா-ரன்வீர் திருமணத்திற்கு வருவோருக்கு அதிர்ச்சி காத்திருக்குது

பாலிவுட் திரையுலகம் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் திருமணம் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங்குடையது தான். கடந்த வருட இறுதியில் பாலிவுட் பிரபலம் அனுஷ்கா ஷர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி திருமணம் கோலாகலமாக நடந்தது.

இந்த வருட தொடக்கத்தில் சோனம் கபூரின் திருமணம் நடந்தது. அடுத்து சந்தேகமே இல்லாமல், தீபிகா ரன்வீர் தான் என்கின்றனர் பாலிவுட் ரசிகர்கள். ஆனால் இதைப் பற்றி இருவர் பக்கமிருந்தும் எந்த தகவலும் வெளியாகாத நிலையில், நவம்பர் 20-ம் தேதி இத்தாலியில் இவர்களின் திருமணம் நடக்கிறது என உறுதிப் படுத்தப் படாத செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

மீடியாவுக்கு தீனி போடாமல் இந்தத் திருமண விஷயத்தை மிக ரகசியமாக கையாள நினைக்கிறார்களாம் இந்த வருங்கால தம்பதி. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் இந்தத் திருமண விழாவில் மொபைல் ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப் பட்டுள்ளதாம்.

Sharing is caring!