துணை ஜனாதிபதிக்கு கார்த்தியும் சூர்யாவும் நன்றி

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி உள்ள படம் “கடைக்குட்டி சிங்கம்”. 2டி என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்திருந்தார். கூட்டு குடும்ப வாழ்க்கையுடன் விவசாயத்தின் பெருமையையும் பேசிய இப்படம், தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

தெலுங்கில் சின்னபாபு என்ற பெயரில் வெளியாகி உள்ள இப்படத்தை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பார்த்து பாராட்டியிருந்தார். இவரின் பாராட்டு படக்குழுவினரை உற்சாகமாக்கியது. துணை ஜனாதிபதிக்கு கார்த்தி நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்பட தயாரிப்பாளருமான சூர்யாவும் துணை ஜனாதிபதிக்கு நன்றி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது… “நாட்டின் மிகப்பெரிய தலைவரான நீங்கள்(துணை ஜனாதிபதி) படத்தை பார்த்து பாராட்டியுள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளது” என்று கூறியிருந்தார். மேலும் படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா.

Sharing is caring!