துப்பாக்கி பாகம் 2 நிச்சயம் எடுப்பேன்… முருகதாஸ் தகவல்

சென்னை:
துப்பாக்கி படத்தின் 2ம் பாகம் நிச்சயம் எடுப்பேன் என்று இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் 3 படங்கள் இயக்கிவிட்டார் முருகதாஸ். துப்பாக்கி, கத்தி, சர்கார் என அனைத்து படங்களும் ஹிட்.

ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் முருகதாஸ் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் எடுப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மேலும் ரஜினி நடிப்பில் தான் தற்போது இயக்க உள்ள படம் அரசியல் படமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!