துப்புரவு பணியாளர்கள் நலநதி… பிரதமர் சொந்த பணத்தில் இருந்து நிதி

புதுடில்லி:
துப்புரவு பணியாளர்களின் நல நிதிக்கு பிரதமர் மோடி தன் சொந்த சேமிப்பில் இருந்து ரூ. 21 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்து முடிந்த கும்பமேளாவில், சிறப்பாக பணியாற்றிய, துப்புரவு பணியாளர்களின் நல நிதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த சேமிப்பில் இருந்து, 21 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

உ.பி., மாநிலம், பிரயாக்ராஜில், கங்கை, யமுனை மற்றும் வேதத்தில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி நதிகள் இணையும், திரிவேணி சங்கமத்தில், ஜன., 15ல் துவங்கிய கும்பமேளா, சமீபத்தில் முடிவடைந்தது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, 22 கோடி பேர் புனித நீராடினர்.

பிரதமர் நரேந்திர மோடியும் சமீபத்தில் புனித நீராடினார். கும்பமேளா நடந்த பகுதியை துாய்மையாக பராமரித்த துப்புரவு தொழிலாளர்களை பாராட்டியதுடன் அவர்களுக்கு பாத பூஜையும் செய்தார். இந்நிலையில், கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் நல நிதிக்கு, பிரதமர் மோடி தன் சொந்த சேமிப்பில் இருந்து, 21 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளாராம். இதை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!