துரிதமாக ‘இந்தியன் 2’

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் நடித்து வெளியான சமூகப் படம் ‘இந்தியன்’. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம், அதே கூட்டணி கைகோர்த்து எடுக்கவிருக்கிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

‘இந்தியன் 2’ படத்தின் படப்படிப்புக்காக கடந்த மாதம், சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி துவங்கியது. கமல் முதுமையான தோற்றம், இளமையான தோற்றம் என இரு தோற்றங்களில் தோன்றுகிறார். முதுமையான தோற்றத்தை கொண்டு வருவதற்காக, ஹாலிவுட் மேக்-அப் கலைஞர்கள் வந்தனர். அவர்கள் கமலுக்கு வயதான தோற்றத்தில் மேக்-அப் போட்டு, டெஸ்ட் எடுத்தனர். பின், அதை வைத்து போட்டு ஷூட்டும் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், படக்குழுவினர் படப்பிடிப்புக்காக சென்னை தவிர்த்து பொள்ளாச்சி உள்ளிட்ட சில இடங்களுக்கும், அதையடுத்து உக்ரைன் நாட்டிற்கும் செல்ல உள்ளனர். இம்மாதம் 18ல், சூட்டிங் துவங்குகிறது.

பொதுவாக ஷங்கர் படங்களின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடக்கும். ஆனால் இப்படத்தை நான்கு மாதங்களில் எல்லா வேலைகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர். மே மாதம் படத்தை ரிலீஸ் செய்யலாம் என எண்ணியுள்ளனர்.

Sharing is caring!