துருவ் படத்தின் ட்ரைலரை வெளியிடும் நடிகர் சூர்யா

சென்னை:
நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள படத்தின் ட்ரைலரை சூர்யா வெளியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூர்யா, விக்ரம் இருவரும் இணைந்து பிதாமகன் படத்தில் நடித்திருந்தனர். தற்போது விக்ரம் மகன் துருவ் பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது, இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்துவிட்டது. தற்போது இப்படத்தின் ட்ரைலரை இன்னும் சில தினங்களில் சூர்யா தன் டுவிட்டரில் வெளியிடவுள்ளாராம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!