துருவ நட்சத்திரம் சிங்கிள் டிராக் விரைவில் வருதாம்… வருதாம்!

சென்னை:
துருவ நட்சத்திரம் படத்தின் ஒரு மனம் சிங்கிள் டிராக்கும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது என்று இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் தான் துருவ நட்சத்திரம். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விக்ரம் நடித்து வருகிறார். இதன் டீசர் எல்லாம் வெளியிடப்பட்ட நிலையில் படப்பிடிப்பை தற்காலிகமாக சில காலம் ஒத்தி வைத்தனர்.

இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த படத்திலிருந்து நீண்ட நாட்ளுக்கு பிறகு ஒரு அப்டேட் வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் சில டீசர்கள் வெளியிடப்பட இருக்கிறதாம். தேதி விரைவில் அறிவிக்கப்படுமாம்.

ஏற்கனவே அறிவித்திருந்த இப்படத்தின் ஒரு மனம் சிங்கிள் டிராக்கும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாம். இந்த தகவலை இப்படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!