துல்கர் பட வேலைகள் ஆரம்பம்

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்றதுடன் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிய படம் ‘டேக் ஆப்’.. குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், பார்வதி ஆகியோர் நடித்த இந்தப்படத்திற்கு பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்தப்படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய மகேஷ் நாராயணன் இயக்கியிருந்தார்.

இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் இறங்கிவிட்டாராம் மகேஷ் நாராயணன். இந்தப்படத்திற்கு இசையமைக்கவுள்ள கோபிசுந்தர் இது குறித்த டிஸ்கஷனின்போது தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதி செய்துள்ளார்.

Sharing is caring!