தெறி படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் மீண்டும் தொடக்கம்

சென்னை:
தெறி படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. பின்னர் எந்த அறிவிப்பு வராததால் கைவிடப்பட்டது என்று தகவல் கசிந்தது.

தற்போது தெறி படத்தின் ரீமேக் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்க இருக்கிறார். எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படம் பற்றி முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!